பக்கம்:ஓங்குக உலகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஓங்குக உலகம்


செய்ய நினைத்தார்கள். அதற்குள் அவர் பயண எல்லை முடிவுற்றது.

அண்ணா அவர்கள் அரசியலில் மாற்றாரையும் மதிக்கும் நல்லவர் என்பதை எண்ண வேண்டியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு திரு. பக்தவத்சலம் அவர்கள் தம் பிறந்தநாள் விழாவினை ஆண்டு தோறும் கொண்டாடுவதுண்டு. நானும் அதில் முக்கியப் பங்கு கொள்வேன். அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த ஆண்டு, அந்த அவர்தம் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்ய முயன்றோம். யாரைத் தலைவராகத் கொள்வது என்ற பேச்சு எழுந்தது. பலரைச் சொன்னார்கள். நான் அன்றைய முதல் அமைச்சர் அண்ணாவே தலைமை வகிக்க வேண்டும் என்றேன். பலரும் ‘அவர் வரமாட்டார்’ என்றனர். எனினும் நான் ‘அந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள்; அண்ணாவின் நல் உள்ளத்தையும் கண்ணியத்தையும் உங்களுக்குக் காட்டுகிறேன்’ என்றேன். அனைவரும் இயைந்தனர். கூட்டம் திருவல்லிக்கேணியில் நடந்தது. நான் அங்கிருந்து நேரே நுங்கம்பாக்கம் அவின்யூ சாலைக்கு வந்தேன். அண்ணா தம் பணியில் ஆழ்ந்திருந்தார்கள்; நான் எப்போதும் நேரே உள்ளே சென்றுவிடுவது வழக்கம். அன்றும் அப்படியே சென்றேன். இரவு 8.30 இருக்கும். ‘இந்த வேளையில் எங்கே வந்தீர்கள்’ என்றார்கள். நான் நடந்தவற்றைச் சொல்லி மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் பிறந்தநாள் வாழ்வில் தலைமை வகிக்க வேண்டும் என்றேன்; நாளும் குறித்தேன். உடனே ‘இதைவிட எனக்கு வேறு என்ன வேலை? கட்டாயம் வருகிறேன்’ என்று சொல்லி, தன் செயலரை அழைத்து, அன்று இருந்த வேறு நிகழ்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/75&oldid=1127535" இலிருந்து மீள்விக்கப்பட்டது