பக்கம்:ஓங்குக உலகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க பச்சையப்பர்

79


அவர் பெயர் பொறித்த பலகையினைத் தெருவில் இரு புறங்களிலும் இடுவார்கள் என நம்புகிறேன்.

கும்பகோணத்தில் திருப்பணி செய்து கொண்டிருந்த வேளையில் அவருக்கு நலிவு உண்டாயிற்று-நீங்காத நலிவாயிற்று. எனவே 1794 மார்ச்சு 22இல் தம் உயிராவணத்தை எழுதி முடித்தார். அதைப் பவுணி நாராயணப் பிள்ளைக்கு அனுப்பி, தம் இறுதிநாள் நெருங்கிவிட்டதையும் குறிப்பிட்டார். அப்பர் கயிலைக் காட்சி கண்ட-தென் கயிலாயம் என்று போற்றப்பெறுகின்ற திருவையாற்றில் தம் உயிர்பிரிதல் வேண்டுமென்று விரும்பிய பச்சையப்பர், தம் விருப்பப்படியே அங்கே சென்று தங்கி, 1794 மார்ச்சு 31இல் இறையடியுற்றார்.

பின் இவ்வள்ளலது உயிராவணப்படி பல அறங்கள் நடைபெற ஏற்பாடு செய்யவேண்டிய வழிவகைகளைப் பவுனி நாராயணப் பிள்ளை மேற்கொண்டார். குடும்பம் காரணமாகப் பல சிக்கல்கள் தோன்றினபோதிலும், இறுதியில் நீதிமன்றம் நல்ல ஆட்சிக்குழுவினை அமைத்து, என்றும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்தது. இவ்வாறு தொடங்கப்பெற்ற அவ்வறக் கட்டளைகளின் அடிப்படையில் அப்போது ‘அட்வொகேட் ஜெனரலாக’ இருந்த ‘ஜார்ஜ் நார்ட்டன்’ என்னும் அறிஞரின் முயற்சியால் 1842ல் கல்விக்கூடம் தொடங்கப்பெற்றது. அந்தத் தொடக்க நாளிலிருந்து நாம் இப்போது 125 ஆண்டுகளை கடந்துவிட்டோம். ஆம்! இந்த நீண்ட காலத்தில் நாம் எவ்.ெவவ்வாறு வளர்ந்தோம்-உயர்ந்தோம்-பணியாற்றினோம்-பயனளித்தோம் என்பதை இனிக் காண்போமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/82&oldid=1127580" இலிருந்து மீள்விக்கப்பட்டது