பக்கம்:ஓங்குக உலகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஓங்குக உலகம்


“சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதனால்
என்றைக்கும் திருவருள் உடையேம்”

என்று தெய்வச் சேக்கிழார் பாடிய பாடல் இங்கே என் நினைவிற்கு வருகின்றது. கடந்த 125 ஆண்டுகளில் பச்சையப்பர் ஆற்றிய கல்விப்பணி அளவிடற்கரியது.

‘எஸ்பிளனேடில்’ சிறிய அளவில் தொடங்கிய பள்ளி உயர்ந்தது. அப்படியே அதன் கட்டடம் வானோங்கி இன்றளவும் சிறந்து நிற்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அக்கட்டடம் தன் கலையும் எழிலும் குன்றாது பசுமையோடு விளங்குகின்றது. சென்னைக்கு வருவார் யாரும் அதன் தோற்றத்தைக் கண்டு வியவாதிரார். அங்கே தொடங்கிய பச்சையப்பர் கல்லூரி, காலந்தோறும் வளர்ந்து நல்ல நிலையுற்று, ஆயிரக்கணக்கான் மக்களை ஏற்று, பல்வேறு துறைப்பாடங்களையும்கொண்டு ஓங்கிய காலத்து, இடத்தின் எல்லையில் குறுக்கம் கண்டது. எனவே, சேத்துப்பட்டில் உள்ள இன்றைய கட்டடங்கள் கால் நூற்றாண்டுக்கு முன் எழுந்தன-வளர்ந்தன. இன்று தனியார் கல்லூரிகளில் மிக அதிகமான பாடங்களைப் பட்ட வகுப்பு நிலையிலும் உயர்நிலையிலும் கொண்டுள்ளது பச்சையப்பன் கல்லூரியே ஆகும். இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்றி, பரந்த பாரத நாட்டில் மட்டுமன்றி-விரிந்த உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றிச் சிறந்து வாழ்ந்தார்-வாழ்கின்றனர். கல்லூரிப் பேராசிரியர் பலர்-கல்லூரி முதல்வர் பலர்-வணிகர் பலர்-உயர்நீதிமன்ற, இந்தியப் பெருநீதிமன்ற நடுவர் பலர்-அரசியல் மேல் அலுவலர் பலர்-அந்நிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/83&oldid=1127774" இலிருந்து மீள்விக்கப்பட்டது