பக்கம்:ஓங்குக உலகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க பச்சையப்பர்

81


நாடுகளில் இந்தியத் தூதுவர் அலுவலகங்களில் பலர்-ஏன்?-அமைச்சர்கள் பலர்-பாராளும்ன்ற உறுப்பினர் பலர்-சட்டமன்ற உறுப்பினர் பலர்-இன்றைய தமிழக முதலமைச்சர் திரு. சி.என். அண்ணாதுரை அவர்களும் ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. பிரம்மானந்த ரெட்டியவர்களும் பச்சையப்பர் தந்த செல்வங்களே! இன்று தில்லிப் பாராளுமன்றத்தில் ஒரே கல்லூரியில் பயின்ற மாணவர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றால், அக்கல்லூரி பச்சையப்பர் கல்லூரியே யாகும். இவ்வாறே எல்லாத்துறைகளிலும் எங்கள் பழைய மாணவ மணிகள் ஒளிவிட்டுத் திகழ்வதைக் காண நாங்கள் உள மகிழ்கின்றோம்.

வளர்ந்துவரும் அறிவியல் துறையிலும் வாழ்வளிக்கும் மொழித் துறையிலும் எங்கள் கல்லூரி முதலிடம் பெறுகிறது. வேதியியல் விலங்கியல், மரவியல், இயற்பியல் போன்ற துறைகளில் பட்டப்படிப்பும் உயர் பட்டப் படிப்பும் (எம்.எசி) கொண்டுள்ளதோடு, வேதியியல் துறையில் ஆய்வுப் படிப்புக்கும் வகை செய்துள்ளோம். அப்படியே தாய்மொழியாம் தமிழ் மொழியில் எல்லா வகுப்புக்களிலும் சிறப்பு நிலை கண்டு முதுகலை வகுப்பும் (எம்.ஏ.) ஆய்வுப் படிப்பும் ஆக்கம் பெறச் செய்துள்ளோம் இத்துறைகளில் பயின்று பயன்பெற்றோர் பலர். இங்கே மொழி வேறுபாடு இன்றி அறுவகை மொழிகளை மாணவருக்கு அளிக்கிறோம். ‘பச்சையப்பர் கல்லூரிப் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும்’ என்பது நாடறிந்த நல்ல மொழி. ஆம். இங்கே தமிழைச் சிறப்பாகப் பயின்ற மாணவர் இன்று உலகில்-இந்திய நாட்டின் பல பாகங்களில் சிறப்புப் பணியாற்றுகின்றனர். காசியில்-தில்லியில்-சண்டிகரில்-கல்கத்தாவில்-பம்பாயில் -கோலாலம் பூரில்-ஏன்?-அமெரிக்க நாட்டில் சில இடங்களில் பச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/84&oldid=1127775" இலிருந்து மீள்விக்கப்பட்டது