பக்கம்:ஓங்குக உலகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஓங்குக உலகம்


அவாவுகின்றது. நம் பச்சையப்பர் பெயராலேயே பல்கலைக்கழகமே அமைய வேண்டாவோ? வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, கல்லூரிகளில் புதுப்புது பாடங்களுக்கு உரிய இடமும் கட்டடங்களும் அமைத்தல் வேண்டும். புதிதாகத் தோன்றியுள்ள கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பெருந்தொகை செலவிட வேண்டும். பிற அறப்பணிகள் செம்மையாக வளர வேண்டும். இப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரும் நின்ற நலம் பெறக்கூடிய வகையில் நாங்கள் செயலாற்றுகிறோம். இன்னும் அவர்தம் வாழ்வும் வளமும் ஓங்க பல செயல்கள் ஆற்றப்பெறல் வேண்டும். பச்சையப்பர் பெயரால் உள்ள அறச்சாலைகள்-அட்டிற்சாலைகள்-ஆதுலர் சாலைகள்-பிற செயலகங்கள் அனைத்தும் வளரின் நாடு நாடாகும் என்பதை நல்லவர் அறிந்துள்ளார்கள். இந்த 125 ஆண்டுகளாகத் திறம்படச் செயலாற்றிய அறக்குழுவினர் அயராது மேலும் மேலும் செயல்பட முன் நிற்கின்றனர். எனவே உலகெங்கணும் உய்ர்ந்து செம்மைப் பணியாற்றும் எம் பச்சையப்பர் பயந்த நல்லவர் அனைவரும் இவ்வறப்பணி வளர ஆவனகாண வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

நாங்கள் நடத்தும் கல்விச்சாலைகள் ‘இந்து மக்களுக்கே’ என்று வரையறுத்த சட்டத்தால் அறுதியிட்ட போதிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ்ப் பண்பாட்டு அடிப்படையிலும் ‘தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறை’ என்ற சமய ஒருமைப் பாட்டு உணர்விலும் இன்று எல்லாச் சம்ய மாணவர்களையும் சேர்த்து அணைத்துச் செல்லுகிறோம் என்பதைப் பெருமையோடு கூறிக்கொள்ளுகிறேன். எனவே இந்த அறநிலையமும் கடவுளைப் போன்று சாதி சமயம் கடந்ததாய்-நாட்டு எல்லை கடந்ததாய்-நிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/87&oldid=1127585" இலிருந்து மீள்விக்கப்பட்டது