பக்கம்:ஓங்குக உலகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளரும் தமிழை வாழவைத்தவர்

85


வேறுபாடு கடந்ததாய்-ஏன்?-காலங் கடந்ததாய் வாழும் ஒரு பெரும் அறநிலையமாகும்! இத்தகைய நல்ல அறநிலையம், தன் கடந்த 125 ஆண்டு வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் அதே வேளையில், எதிரில் நிற்கும் எண்ணற்ற ஆண்டுகளையும் எண்ணி எண்ணி நாடு வளமுற-மொழி வளம் பெற-மக்கள் வாழ் வாழ்வாகத்தக்க ஆக்கப்பணி புரியத் திட்டமிடுகின்றது. அதன் தொடக்கமே இம் மாதம் 22, 23, 24ல் நடைபெறும் விழா! இந்த நல்ல பணி நாடொறும் தழைக்கவும் ஓங்கவும் உயரவும் மக்கள் அனைவரும் சேரவந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமைகின்றேன். வணக்கம்.

1967-கல்லூரி 125வது ஆண்டு மலர்


13. வளரும் தமிழை
வாழ வைத்தவர்

மிழ் தொன்மையான மொழி. அத்துடன் அது தன்னைத் தொட்டாரை வாழ வைக்கும் தன்மை வாய்ந்தது. வேற்றுப் பணி புரியவந்த பிற நாட்டவருள் சிலர் தமிழைத் தொட்டுச் சாகாவரம் பெற்றமை நாடறியும். அப்படியே தமிழ்நாட்டில் தமிழராகப் பிறந்து தமிழைக் கற்காது-தமிழ் அறியாது-செம்மாந்து வாழ்ந்து உலகில் தாம் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்தவர் பலர். ஆனால் ஏழையராயினும் எளியராயினும் தமிழைத் தொட்டுத் தமிழைப் போற்றி, தமிழ் வாழத் தாம் வாழ நினைத்தவர்களை அத் தமிழ் வாழ வைக்கத் தவறவில்லை. இலக்கிய வரலாற்றினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/88&oldid=1135812" இலிருந்து மீள்விக்கப்பட்டது