பக்கம்:ஓங்குக உலகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாட்டுக்குழைத்த நல்லவர்

91



திரு பக்தவத்சலம் அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் காரியதரிசியாகவும் பின் அமைச்சராகவும் பொறுப்பான உயர்நிலையில் இருந்தமையால் அடிக்கடி மக்கள் தேவை-நலம் கருதி அவரைக் கண்டேன். அவரும் ‘காட்சிக் கெளியராய்’, கேட்டுக் கூடியவரையில் பல் நல்ல ஆக்கப் பணிகளுக்கு உதவி அளித்தார். ஒருமுறை நாட்டில் ஊற்றுக் கால்வாய்களைத் துப்பரவு செய்து, வேளாண்மையைப் பெருக்க நினைத்த நிலையில் எங்களூர்களுக்கு நன்மை செய்ய வலிந்து உதவினார். (அவர் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார்.) என்னை அழைத்து அவர்கள், உங்களூர்க் கால்வாயினைச் சுத்தம் செய்யும் பணியினை நீயே எடுத்துக் கொள். ஒப்பந்தக்காரர்கள் கொண்டால் பாதிப் பணமும் அதில் வந்து சேராது. இப் பணியில் ஊரார் நான்கில் ஒருபாகம் தருவதாக (பணியாக) இசைந்தால், உடன் நீ பணியினை மேற்கொள்ளலாம் என்றார். நான் உடனே என் ஊரில் (அங்கம்பாக்கம்) உள்ள பெரியவர்களைக் கலந்து அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன். ஒரே வாரத்தில் (1947-48 என எண்ணுகிறேன்) அப்பணி என்னிடம் ஒப்படைக்கப் பெற்றது. (அப்போது கோபால ஐயர் என்பவர் செயற் பொறியராகவும் திருமலை ஐயங்கார் மேற்பார்வைப் பொறியாளராகவும் இருந்தனர் என எண்ணுகிறேன்) இவ்வாறு பல வகையில் அன்று ஊர் மக்களுக்கு உதவினார்கள்.

நான் செயலாளனாக இருந்து வாலாஜாபாத்தில் உயர்நிலைப்பள்ளி தொடங்கிய நாளில், எங்களுக்குத் தேவையான ஆறு ஏக்கர் நிலத்தினை (புகைவண்டி நிலையத்துக்கு எதிரில்) அன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் சொல்லி எங்களிடம் ஒப்படைக்கச் செய்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/94&oldid=1127594" இலிருந்து மீள்விக்கப்பட்டது