பக்கம்:ஓங்குக உலகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாட்டுக்குழைத்த நல்லவர்

93



அமைந்தகரையில் நான் சொந்தமாக வீடுகட்டிக் குடியேறியபோது அந்தத் தமிழ்க்கலை இல்லத்தினை திரு பக்தவத்சலம் அவர்களே திறந்து வைத்தார்கள். திறந்து வைத்து எங்களுடன் உடன் இருந்து உண்டு வாழ்த்திச் சென்றனர். பின் அவர் வாழ்த்தின் பலத்தால் என் தனிவாழ்வும் சமுதாயப் பணியும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

தமிழுக்கு அவர்கள் ஆற்றிய பணியினையும் குறிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் காலத்தில்தான் ‘ஜான் முர்டாக்’கின் தமிழகம் பற்றிய தொகுப்பும் பிறவும் வெளிவந்தன. தமிழ் வளர்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகள் உருவாயின. வெளிப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை அமைக்கப் பெரிதும் உதவினார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது அவற்றிற்கு வேண்டிய நிதியினை உதவினார். ஒருமுறை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தார் நிதி வேண்டி என்னையும் அழைத்துக் கொண்டு அவரிடம் சென்றனர். ஒரு பத்தாயிரம் எதிர் பார்த்தனர் என அறிந்தேன். அவர்களிடம் பெங்களூரில் இவர்கள் செய்யும் தொண்டினை விளக்கி, வந்த காரியத்தையும் குறித்தேன். ‘எவ்வளவு தரவேண்டும்’ என்று என்னையே கேட்டார். ‘தங்கள் விருப்பம்’ என்றேன் அவர்கள் நினைந்து வந்ததற்கு இரண்டு மடங்குக்கு மேலாகத் தருவதாகக் கூறி, அவர்கள் விண்ணப்பத்தினைப் பெற்று ஒரு வாரத்தில் உரிய காசோலையினையும் அனுப்பி உதவினார்கள்.

அவர்கள் காலத்தில் முதல் முதல் அரசாங்கக் கல்லூரிகளில் தமிழாசிரியர்களுக்கு இருந்த தாழ்வுநிலை நீங்கிற்று. அவரேதான் முதல்முதல் தமிழாசிரியர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/96&oldid=1127596" இலிருந்து மீள்விக்கப்பட்டது