பக்கம்:ஓங்குக உலகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாட்டுககுழைத்த நல்லவர்

95



1966ல் சூன் மாதத்தில் ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘தமிழக அரசின் (அன்றைய சென்னை அரசின்) பரிந்துரையின்பேரில் அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவனாக நான் நியமிக்கப் பெற்றிருப்பதாகவும் உடன் பணியில் சேரவேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் அதுபற்றி நினைக்கவும் இல்லை. அன்றைய தமிழக முதல்வர் இவர்தாம். எனவே உடனே இவர்கள் இல்லம் சென்று கடிதத்தைக் காட்டினேன். அவர் ‘ஆம்! நான்தான் பரிந்துரை செய்தேன். நீங்கள் எங்கும் வெளியூர் செல்ல மாட்டீர்கள் என்பது தெரியும் (ஒருமுறை இதியோப்பியாவுக்கு என்னைச் செல்லுமாறு பணிக்க நான் மறுத்ததைச் சுட்டிக் காட்டினார்). எனவே கேளாமல் அனுப்பிவிட்டேன். வெளிமாநிலத்தில் தமிழரின் பெருமையைத் தக்கவாறே காக்கவேண்டும். எனவே நீங்கள் செல்லத்தான் வேண்டும்’ என வலியுறுத்தினார். எனினும் நான் இசைந்து, ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நான் அங்கிருக்கும்போது, அவர்கள் பலமுறை தில்லி செல்லும் வழியில் ஒருநாள் ஐதராபாத்தில் தங்கி, அங்குள்ள தமிழர் கூட்டங்களில் பேசவேண்டும் என்பதே அது. அவர்களும் இசைந்தார்கள்.

உஸ்மானியாவில் ஒருநாள் என் அறையிலிருந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொலைபேசியில் சென்னை முதல்வரின் செயலர் என்னை அழைப்பதாகக் கூறினர். உடனே சென்று கேட்டபோது முதல்வரின் செயலர் (கிருஷ்ணையா என நினைக்கிறேன்) மறுநாள் காலை தில்லி செல்லும் வழியில் 9 மணிக்கு முதல்வர் அங்கு இறங்கி, மறுநாள் அதேவிமானத்தில் செல்வதாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/98&oldid=1127600" இலிருந்து மீள்விக்கப்பட்டது