பக்கம்:ஓங்குக உலகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ஓங்குக உலகம்


தகவல் தந்தார். ஆந்திர அரசுக்கும் தெரிவித்திருந்தனர். அப்போது திரு. பிரமானந்த ரெட்டி அங்கே முதல்வர். அவர்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

மறுநாள் காலை விமான நிலையத்தில் தமிழர் பலர் சூழ அவரை வரவேற்றேன். அன்று பிற்பகலிலும் மாலையிலும் ஐதராபாத்திலும், சிக்கந்திராபாத்திலும் தமிழர் பெருங்கூட்டத்தில் பேசி மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த என்னிடம், ‘திருப்திதானே’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நான் அவர்தம் பெருந்தன்மையினை எண்ணி, வியந்து, போற்றி வழியனுப்பினேன்.

அவர்தம் மகளார் ருக்குமணி அவர்கள் திருமணத்தின் போது அவர் அமைச்சராக இல்லை. எனினும் அந்த மண வேளையில் (சுமார் 10-30 மணி இருக்கும்) தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் எல்லாச் செயலர்களும் பிற அதிகாரிகளும் வந்திருந்ததை, அத்திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அன்றைய முதல்வர் இராஜாஜி அவர்கள் ‘செக்ரடேரியட்டே இங்கே வந்திருக்கின்றதே’ என வியந்தனர். இதுவே திரு பக்தவத்சலம் அவர்களது பண்பினையும் மக்கள் தொடர்பையும் அவர் கீழ் பணிபுரிந்த செயலர் மற்றவர்தம் பரிவினையும் விளக்கும்.

அவர்கள் 1952 தேர்தலில் தோல்வியுற்றபின் பாரத தேவியின் நிருவாக ஆசிரியரானார். எனினும் அதன் பொறுப்பினைக் கவனிக்க ஒருவர் தேவையாக இருந்தது. என்னை அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். நான் கல்லூரியில் பணி செய்வதால் இயலாநிலையினைச் சொன்னேன். பின் அவர்கள் அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/99&oldid=1127601" இலிருந்து மீள்விக்கப்பட்டது