பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

களின் வாழ்வு பாழாக்கப்படும்; அதற்கு சமூக நியாயங்கள், கட்டுப்பாடு, புரோகித அமைப்புகள், ஜாதகக் கட்டங்கள் எல்லாம் துணை புரியும் என்பன நிரூபணமாயிற்று அவளுக்கு, அவளது கல்யாணத்தின் மூலம்,

மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த பண்ணையார் பரமசிவம் பிள்ளையை பார்த்ததுமே சிவகாமி மயங்கிக் கீழே விழாமலிருந்தது பெரிய காரியம்!

‘வேறு என்ன பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்று எதற்காக ஐயா பார்க்க வேணும்? அருமையான பொருத்தம், பெயர்ப் பொருத்தம்-அடடா! சுலபமாகக் கிடைக்கக் கூடியதா! அதிர்ஷ்டம் நிறைந்த பொருத்தம் அல்லவா-இருக்குது பாருங்களேன்...பரமசிவம்-சிவகாமி-இதை விட வேறு பொருத்தம் என்ன இருக்கும்?’ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

‘இன்றைய சமுதாயம் குட்டிச் சுவராக இடிபட்டு நிற்பதற்கு முக்கிய காரணமே இந்தக் கிழத்தைப் போல, எதையும் முன்னிருந்து செய்ய தானாகவே வந்து விடுகிற பெரிய மனிதர்கள் தான்’ என்று ஒரு இளம் உள்ளம் குமுறியது. விருந்தினரில் ஒருவன் அவன். ஆனால், ஒன்றிரு இளைஞர்கள் புகைக்து குமுறுவதனால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது!

பச்சைக்கிளி போலே, பூங்கொடி போல, நெளிகின்ற மின்னல் மாதிரி இருந்த சிவகாமி அருகிலே அமர்ந்திருந்த உருவம் அந்த இடத்துக்குப் பொருத்தமில்லாதது. இளந் தொந்தியும், தடிமூஞ்சியிலே ‘ஆட்டுக் கொம்பு’ மீசையும்-காணவே சகிக்க