பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கவலைப்பட்ட அவள் மனக்கொடி ஆடியது. நடுங்கியது, பற்றுக்கோடாக எதையாவது பிடித்துக் கொள்ளத் துடித்தது. சந்தர்ப்பக் காற்றும் சதி செய்தது.

ஒருநாள் சிவகாமி பம்பினடியிலே குளித்து விட்டு சேலை மாற்றி உடுத்தும் போது அவள் மேனி சுடர் விளக்கனைய ஒளி காட்டியது.

இன்றையப் பெண்களுக்கே உடல் வெளிச்சம் போடாமல் சேலை மாற்றிக் கட்டத் தெரியாது. அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கென்றே சல்லாத்துணிப் புடவை கட்டுகிறார்கள். அவை நனைந்து விட்டாலோ, உடலொடு அப்பிக் கொண்டு கலையெழிற் காட்சியாகத் தானிருக்கும். ரசிகக் கண்களுக்கு விருந்துதான்!

அதை அறிந்த-அது போன்ற சமயங்களைப் பயன்படுத்தத் தவறாத - காத்தலிங்கம் அந்த வீட்டிலே கார் டிரைவராக இருந்தான். அவன் அங்கு வந்தது சந்தர்ப்ப வசத்தாலா! சதி நினைவாலா?

எதானால் என்ன! அவள் சட்டென அவன் முன் வந்துவிட்டான். பின் தவறை உணர்ந்தவன் போல விரலைக் கடித்தபடி தலையை தாழ்த்தி நின்றான், தயங்கினான், வெளியேறினான்.

அவள் முகம் சிவந்தது. வெட்கத்தால் சாம்பினாள். செயலற்று நின்றாள் ........

மறுமுறையும் சந்தர்ப்பம் சதி செய்தது. சிவகாமி தொழுப் புறத்திலே, உடல் தண்ணீரை வெளியே வடித்துக் கொண்டிருந்தாள். அங்கு-வேண்டுமென்றோ, தெரியாமலோ-காத்தலிங்கம்