பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

போது தனி எழிலுடன் குலுங்கிய பின்னழகை ரசித்துவியந்த அவன், சிவகாமி திரும்பி வரும்போது தலைகுனிந்து நின்றான். அப்போது அவன் அழகை அவள் ரசித்தாள்.

அவனுக்கு வயது இருபத்தைக்து தானிருக்கும். கறுப்பு நிறம்தான். ஆனால் உழைப்பால் முறுக்கேறிய சதைத் திரட்சிகள் அங்குமிங்கும் துள்ளிய அவன் மேனியிலே தனி மினுமினுப்பு இருந்தது. அந்த உறமேறிய உடல் வனப்பையும் வலிவையும் எந்தப் பெண்ணும் வியந்துதான் ஆக வேண்டும், சிவகாமியும் பெண்தானே!

'ஏ, இந்தா' என்றாள் அவள்.

அவன் திடுக்கிட்டான். அவள் புன்னகைத்தாள் கவர்ச்சிக்கும் மோகனமென்னகை!. அவள் கண்களில் அசாதாரண ஒளி ஒடத்தான் செய்தது.

‘இதைப் பிடியேன். ஏன் முழுச்சுக் கிட்டே நிக்கிறே?' என்றாள் அவள். அவள் குரலிலே ஒரு குழைவு இருந்தது. ஒரு மிடுக்கு-உயர்ந்த ஜாதி என்கிற அந்தஸ்து அகந்தையிலே ஒலிக்கிற கர்வம்-தொனித்தது.

அவன் உள்ளத்திலே தைத்தது அது. இன்றைய சமுதாயத்திலே அவன் சிறுமிகளாலும் சின்னப் பயல்களினாலும் ‘எலே’ ‘ஏண்டா' என்று அழைக்கப் பட்டாலும் பொறுமுவது தவிர வேறோன்றும் செய்ய இயலாத நிலையில் தானிருந்தான், அவன் உழைப்பவன். வயிற்றுப்பாட்டுக்காக அடிமை வேலை செய்ய நேர்ந்த தொழிலாளி. அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் உழைப்போனும் மனிதன்-அவனுக்கும் இதயம் உண்டு: சுயமரியாதை உண்டு, தனிமனித கெளரவும்