பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

பிம்பமாய் திகழ்ந்த சிவகாமியின் கன்னத்திலே, உதடுகளிலே, முகத்திலே முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தமிட்டு .....

அவள் விழித்தாள், அசந்து தூங்கிக் கிடந்த சிவகாமி விழித்தாள், உணர்ச்சித் தாக்குதலுக்கு உள்ளான போது.

காத்தலிங்க அணைப்பிலே இருப்பதாகக் கனவு கண்டு விழித்த அவளது கண்கள் பண்ணையாரைக் காட்டின ஒரு கணம்-பிரமை!

நன்கு நோக்கினாள்.

‘அப்பா!' என்றாள் மகள், அதிலே எவ்வளவோ உணர்ச்சி, எவ்வளவோ குற்றச்சாட்டு.

என்றாலும், பிரமாதமான பாபம் இல்லையே! பழக்கமான இன்பம் அவளுக்கு-மற்றுமோர் ஆணின் அணைப்புதானே! அது யாராக இருந்தால் என்ன!

சிவகாமிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவன் மாதிரி கிழடுதட்டிப் போயிருந்த-‘கணவன்’ ஸ்தானத்தைப் பிடிக்க விரும்பிய-தந்தையை எப்படிப் பிடிக்கும் ?

அவள் பெண். அவளுக்கு வயசு பதினெட்டு. போனவருஷம் தான் அவளுக்குக் கல்யாணமாயிற்று. அழகு மலர் அவள். காமச் .சுவையின் ரகங்களை ஒருவாறு உணர்ந்தவள் - உணர ஆரம்பித்திருந்தவள்.


கட்டுப்பாடு அவளை உறுத்தியது. ஆண்கள் அவளை தங்கள் உரிமைப் பொருளாக்கி, இஷ்டம் போல் ஆள்வதை அவள் விரும்பவில்லை. தன் இஷ்டம்போல் இஷ்டப்பட்டவரை ஆட்டிவைக்க விரும்பி