பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

னாள் சிவகாமி. பெண்களுக்கு இயல்பான ஆசைகளில் அதுவும் ஒன்று.

ஆகவே, அந்தப் பறவை-ஒரு முறை ஓடிக்கண்ட பறவை-மீண்டும் வெளியேறத் தவித்துக் கொண்டிருந்தது.

சந்தர்ப்பம் துணைபுரிந்தது. அடுத்த வீட்டிலே அமைந்திருந்த ஜவுளிக்கடையில் வேலைபார்த்த வாலிபன்-அவளைப் பிடிக்க வலைவீசிக் கொண்டிருந்தவன் - அவளை ‘தட்டிக்கொண்டு’ போய்விட்டான். அவனுக்கும் அவளுக்கும் எத்தனைநாள் தொடர்போ! யாருக்கும் தெரியாது.

ஆனால் ‘ஓடிப்போய் விட்டாள்! ஓடிப்போய் விட்டாள்-தட்டுவாணிச்சிறுக்கி!’ என்று சமூகத்துப் பெரியார்கள் ஏசினர்கள். அவர்கள் தான் அவள் வாழ்வைப் பாழ்படுத்திய மூலகாரணவர் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அவள் எங்கு ஓடிப்போனாளோ அந்த விஷயமும் யாருக்கும் தெரியாது!