பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருக்க வேண்டும். வாழ்வின் நிர்வாணத் தன்மையை சுட்டிக் காட்டி, சிறுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது எழுத்தாளன் கடமை. சிந்திக்கச் செய்யவேண்டியது அவன் எழுத்தின் லட்சியம்.

அதை அருமையாக, அழகாக, இனிமையாக, கலையாகக் கையாண்டு ரசிகர்களின் அமோகமான பாராட்டுதல்களையும் அன்பையும் பெற்று வரும் எழுத்தாளர் சொக்கலிங்கம் தனக்கே உரிய தனி முறையில் ‘ஓடிப்போனவள் கதை’யை எழுதியிருக்கிறார் . உண்மையை உள்ளபடி எழுதியிருப்பதற்காக - உணர்ச்சிகரமாக-எழுதியுள்ளதற்காக சொக்கலிங்கத்தைப் பாராட்ட வேண்டும். அவர் துணிவை வியக்கவேணும்.

உண்மைகளை, புரட்சிகரமான புதுமையான சிந்தனைகளை, முன்னேற்ற இலக்கியங்களை வெளியிடும் சாந்தி நிலையத்தினரின் துணிவையும் வியக்காமல் இருக்கமுடியாது.

'ஒடிப்போனவள் கதை' தமிழ் இலக்கியத்துக்கு புரட்சிகரமான புதுமை. ஆனால் நாட்டிலே அன்றாட நிகழ்ச்சி! இதை ஏட்டிலே பதித்த சொக்கலிங்கம் ‘பாபம்’ எதையும் செய்துவிடவில்லை. இப்படிச் செய்தது இலக்கியத் துரோகம் என்று கருதப்படுமானால், தீவிரமாக உள்ளதை உள்ளபடி எழுதுகிற முல்க்ராஜ் ஆனந்த், கே. அஹமட் அப்பாஸ் முதலிய இன்றைய எழுத்தாளர்களும், மாப்பஸன்ட், டி. எச். லாரன்ஸ் போன்ற பிரபல இலக்கியாசிரியர்களும் எழுதியவை எல்லாம் ‘இலக்கியத்துரோகம்’ என்று ‘சித்திரபுத்திரக்கணக்கு’ எழுதட்டும் இலக்கிய சனாதனிகள்! கவிராயர் சுப்ரதீபமும் காளமேகமும்