பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறபுலவர்களும் பாடிய பெண் அங்க வர்ணனைகளை ரசிக்கிறவர்களுக்கு இது இலக்கியமாகப் படவில்லை என்றால். நான் ஆச்சர்யப்படமாட்டேன். குறைகூறுகிறவர்களை ‘கள்ளமனக்குள்ளகரிகள்’ என்று கூறுவேன். வெளிவேஷமாக புனிதத்தனம்பேசிவிட்டுமறைவிலே ருத்ராக்ஷப்பூனைத்தனம் பயில்கிற எத்தர்கள் அவர்கள். அவர்களை நானோ நண்பர் சொக்கலிங்கமோ, எங்கள் நண்பர்களோ சட்டை செய்யப்போவதில்லை.

மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிறார்கள் உணர்ச்சிச் குறையிலே சிக்கி அல்லாடுகிறபோது அவ்வேளையில் அவர்கள் தங்களை, தாங்கள் வகுத்த தர்மங்களை முறைகளை மறந்துவிடுகிறார்க்ள். பிறரது குறை கூறல்களையோ வசைமாரிகளையோ கருதுவதில்லை. உலகத்தையே மறக்கடிக்கிற உணர்ச்சிக் கொதிப்பு மனிதர்களை வெறியர்களாக்கிவிடுகிறது. உணர்ச்சிக்கு அடிமைகள் அவர்கள். உணர்ச்சிக்கு தூபம் போடுகின்றன சந்தர்ப்பங்கள். மணிதன் மனிதனாக வாழவேண்டுமானால் சந்தர்ப்பங்களில் சிக்கித் திணரும் சிறு துருப்பாகிவிடாமல் மிகை பட்ட உணர்ச்சிகளின் கருவியாகிவிடாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். இத்தகைய சிந்தனைகளை வலியுறுத்தும் சித்திரம்தான் ‘ஒடிப்போனவள் கதை.’

சாந்திநிலைய வளர்ச்சியிலே ஆர்வமும் ஒத்துழைப்பும் காட்டுகிற நண்பர்களுக்கு எங்கள் நன்றி,

கோரநாதன்