பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

வருற அந்தத் தமிழ்த் தலைவரை நீங்க பூசிக்கிறதிலேருந்து, இந்த ஏழைச் சிறுவனுக்கும் நல்ல வழி கெடைக்குமிங்கிற நம்பிக்கையோட நான் விடிஞ்சதும் உங்களை வந்து சந்திக்கிறேனுங்க, ஐயா !”

உரிமையாளர் புன்னகையுடன் தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தனுப்பினார்.

தெருவில் அன்றைய மாலைப் பதிப்புப் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தவரிடம் உமைபாலன் மெல்ல அண்டிப் பார்த்தான். பார்த்த சடுதியில் அவனது முகம் கலவரம் அடையத் தொடங்கிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/12&oldid=1160547" இலிருந்து மீள்விக்கப்பட்டது