பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உமைபாலன் ரொம்பவும் யோசித்தான்; பிறகு தயங்கினன். "எனக்கு உங்க அன்புதான் இப்ப வேணுமுங்க. என்னால உங்களுக்கு ஒரு பத்துக் காசு நஷ்டம் ஏற்பட எனக்கு மனசு வரலீங்க!” என்று நாசூக்காகச் சொன்னன்.

கோபு வியப்பில் விரிந்த விழிகளுடன் அவனையே இமை மூடாமல் பார்த்தான். ஏனோ, புராண புருஷர்கள் சின்னஞ் சிறார்களாக இருக்கையில் செய்து காட்டிய திருவிளையாடல்களின் நிழல்கள் அவன் உள்ளத் திரையில் ஒடிக் காண்பித்தன.

"தம்பி!”

"அண்ணா"

பாசத்தின் குரல்கள் தழுவின.

“உனக்கு ஊர்?”

“ராமநாதபுரம் சீமைங்க!”

“அப்பா அம்மா?”

“நான் அனாதையுங்க!”

“உனக்கு என்ன வேலை தெரியும்?”

"இன்ன வேலை தெரியும்னு சொல்றதுக்கு எனக்கு முன் அனுபவம் ஏதுமில்லிங்க. இப்பத் தான் முழுவருஷப் பரீட்சை எழுதினேன். ஒன்று விட்ட மாமாவோடே கொஞ்சம் மனத்தாங்கல். பிரிஞ்சு வந்திட்டேன். அதனாலே, எந்த வேலையையும் பெருமை சிறுமை பார்க்காமல் பார்க்க வேணுமிங்கிற நினைப்பு எனக்கு இருக்குதுங்க!”

'ஒவ்வொரு பேச்சையும் எவ்வளவு தூரம் சிந்தனை பண்ணிப் பேசுகிறான் இச்சிறுவன்!'கோபுவுக்கு அதிசயம் அடங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/17&oldid=1161984" இலிருந்து மீள்விக்கப்பட்டது