பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பலமாக அமையவல்லது !’ - நேருஜி அடிக்கடி சொல்லி வந்த இவ்வாசகத்தை அவன் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டான். அவனையும் அறியாமல், அவனுக்குத் தென்பு ஊறியது; தன்னம்பிக்கையும் ஊறியது. ஏதோ ஓர் இலட்சியத்தைத் தன் சித்தத்தில் ஏற்றியவகை, அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

அவனுடைய தோழர்கள் இன்னமும் கும்பகர்ணன் சேவையில் லயித்திருந்தார்கள்.

உமைபாலன் அவர்களை எழுப்பினன். அவர்களுக்கு எப்படிக் கோபம் வந்து விட்டது!

அந்தப் பையன் ஜெயராஜ் மட்டும் முகத்தைச் சுளித்துக்கொண்டே எழுந்தான். மூக்கின் நுனியில் கோபம் இருந்தாலும், விரல் நுனியில் சுறு சுறுப்பு இருந்ததே ! - இல்லாவிட்டால், இவனைக் கிட்டங்கிப் பொறுப்புக்கு வைத்திருப்பார்களா ?

"பாலா!"

“என்னப்பா, ராஜ் ?”

“இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?"

“ப்ரோக்ராமா?... நாம் என்ன பெரிய மனிதர்களா, நாளைக்கு ஒரு நிகழ்ச்சியும் வேளைக்கொரு விழாவும் நமக்காகக் காத்திருக்க !...”

“ப்பூ!...இவ்வளவுதானா நீ?...என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்குது! ம்...”

“ஊஹாம், தெரியாது !’ -

“சரி, சரி! ... இன்னிக்கு லீவு. அதாவது ஒனக்குத் தெரியுமில்லையா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/20&oldid=1162587" இலிருந்து மீள்விக்கப்பட்டது