பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

"ஓ, தெரியுமே !”

“அதாகப்பட்டது, இன்றைக்கு நமக்குச் சம்பளத்தோடு ஒருநாள் சட்டப்படி லீவு என்பது உனக்குத் தெரியும் !”

"ம்"

“அப்படியென்றால், இன்று நமக்கு லீவு. அதாவது, நம் உழைப்புக்கு விடுமுறை. இல்லையா, பிரதர் ?"

“வாஸ்தவம்!"

“இதுக்கு முந்தி உழைச்சதுக்காகவும் இதுக்குப் பிந்தி உழைக்க வேண்டியதுக்காகவும் நாம் நம்ம உடம்பைத் தயார்ப்படுத்துறதுக்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் இன்னிக்கு !”

“மெய்தான் !"

உமைபாலன் சிரிப்பைக் காட்டிக்கொள்ளத் தவறவில்லை.

“ஆகவே..."

“ஆகவே ... இன்றைக்கு நம்ம இஷ்டப்படி ஜாலியாக இருக்க வேணும் ! என்ன, பாலா?"

உமைபாலன் பதில் எதுவும் வெளியிடக் காணோம் !

அதற்குள் ரேடியோவை யார் வைத்தார்கள்?

துதிப்பாடலின் பக்தி ஒலி மிதந்து வந்தது.

ஜெயராஜ் மறுபடி கேட்டான். கழுத்தில் ஊசலாடியது சிலுவைக் கயிறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/21&oldid=1162590" இலிருந்து மீள்விக்கப்பட்டது