பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

பிரஹதீஸ்வரர் ஆலயம், சரபோஜி மன்னர் அரண்மனை, கலைக்கூடம் போன்றவற்றைப் பார்த்துக் களித்துவிட்டார்கள் அவர்கள். ஆகவே, எங்கே போவது என்று மட்டுப்படவில்லை. முதலில் ஜெயராஜ் வயிற்றுப்பாட்டைக் கவனித்தான். உமைபாலன் வெளியே நின்றான். அப்போது, முன்பொரு சமயம் பார்த்த பிச்சைக்காரத் தங்கச்சி பூவழகியைக் கண்டான். விடுமுறைச் செலவுக்கென்று கிடைத்த நாலணாச் சில்லறையில் ஒரு பத்துக்காசை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டு, ஆர்ச்சுக்கு நெருங்கி ஒரு பக்கம் ஒதுங்கினான். நிஜார்ப்பையில் கையை நுழைத்துப் பழைய பத்திரிகைத்தாளைப் பிரித்தான். “ காணவில்லை !’ - என்ற தலைப்பில் செய்யப் பட்டிருந்த விளம்பர வரிகளைப் படித்தான். அவனுடைய கண்கள் ஏன் இப்படிக் கலங்குகின்றன?... அவன் ஏன் அப்படிப் பெருமூச்சு விடவேண்டும்?...

கண்களைத் துடைத்தபடி, மனதிற்குள் 'ஒன்று... இரண்டு...' என்று சொல்லி நாட்களைக் கணக்கிட்டான். காலடி அரவம் கேட்டது. சடக்கென்று பத்திரிகைத் தாளைக் குறுக்கு வசமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/24&oldid=1162596" இலிருந்து மீள்விக்கப்பட்டது