பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

ஒரு சந்து வந்தது.

ஜெயராஜ் தன் நண்பனை நிறுத்தி அவன் கால் சட்டையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் : “ டே ! பிடிடா !”

உமைபாலன் மறுத்தான். என்ன சொல்லி மன்றாடியும் மறுதளித்தான்.

ஆகவே, ஜெயராஜ் வெகு குதூகலத்தோடு சிகரெட் பிடித்தான். “எங்க வீட்டிலே - ஊஹூம், பங்களாவிலே சிகரெட் எடுத்துக் குடுக்கிறதுக் குன்னே ஒரு பையன் உண்டு !" என்றான்.

“சிகரெட் உனக்கு எடுத்துக் கொடுக்கவா?...”

“ நீ சுத்த கண்டிரியாக இருக்கியே ? நான் அவ்வளவு தைரியமாக அங்கே பிடிக்க முடியுமாடா?”

“உஸ் ... 'டா’ போடாதே ... இது தான் உனக்கு மாப்பு ! ... உன்னைப்போல எனக்கும் சுய கவுரவம் உண்டு ! உஷார் !" என்று கம்பீரமாக மொழிந்தான் உமைபாலன். சென்னையைப் பார்க்க வேண்டுமென்ற தன் ஆசையை வெளியிடவே, உடனேயே நிறைவேற்றுவதாக வாக்களித்தான் ஜெயராஜ்.

இருவரும் ஹோட்டலை அடைந்தபோது மணி இரண்டு அடிக்கச் சில வினாடிகள் இருந்தன.

சாப்பாட்டு இலைகள் அவர்களை அழைத்தன.

ஜெயராஜ் உட்கார்ந்து வாயில் அள்ளிக் கொட்டத் தொடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/26&oldid=1163069" இலிருந்து மீள்விக்கப்பட்டது