பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

போட்டாரோ ? -அவர் கொடுத்த காசுகளை எண்ணிப் பெட்டியில் போட்டுக்கொண்டார். பிறகு, காற்றில் புறம் மாறிவிட்ட அந்த அட்டையை வாகாய்த் திருப்பிவிட்டார்.

அதில் :

"இன்று முதல் சாப்பாடு ஆரம்பம்!” என்ற அறிவிப்பு இருந்தது. அளவுச் சாப்பாடு, எடுப்புச் சாப்பாடு, முழுச் சாப்பாடு, டிக்கட் சாப்பாடு என்ற பாகுபாடுகளின் விலை விவரங்களும் இருந்தன.

அது தருணம், முதலாளி கூப்பிட்டார்: “டேய் பாலா!"

உமைபாலன், பாலரவாக வடிவம் பெற்று ஓடி வந்தான். கையில் துடைக்கும் நீலத் துணி காட்சியளித்தது. பணிவுடன் நின்றான்.

“எங்கேடா ஜெயராஜ்?"

அவன் உள்ளே சென்றான். "பாலா, நம்ம ராஜ் சர்பத் சாப்பிடக் கொல்லைப் பக்கமாய்ப் போயிருக்கான். நீ கண்டுக்காதே. பெரிய பணக் காரப்பிள்ளை அவன். அவன் தயவு நமக்கு எப்பவும் வேணும். அவன் இங்கே இனி இருக்கப் போறது நாள் கணக்குத்தாண்டா! ... உன்னையும் என்னையும் கூட அவன் பட்டணத்துக்கு அழைச்சுக் கிட்டுப்போய்த் தன்னோட பங்களாவிலே வச்சுக்கிடப்போறதாச் சொல்லியிருக்கானே!...” என்றான் அப்துல்லா.

இவர்களின் சம்பாஷணை முடிவதற்கும் ஜெயராஜ் அங்கு வருவதற்கும் கனகச்சிதமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/29&oldid=1163074" இலிருந்து மீள்விக்கப்பட்டது