பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

"முதலாளி அய்யர் கூப்பிடுகிறார் உன்னை!” என்றான் உமைபாலன், ஜெயராஜிடம்.

அவனோ வெகு அலட்சிய பாவத்தோடு, "ம். சரிடா, நீ போ!" என்றான்.

உடனே இதைக் கேட்டதும் உமைபாலனுக்குக் . கோபம் வந்துவிட்டது. “டே பட்டம் போடறியா?... ரொம்பத் திமிர்தான்! உன் பணக்கொழுப்பை எங்கிட்டவா காட்டறே?..." என்று முஷ்டியை ஓங்கினான்.

ஜெயராஜ் அதற்குள் அசந்துவிட்டான். “வீட்டிலே கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பழக்கமாப் போச்சப்பா! கோபிக்காதே!” என்று பவ்யமாகக் கெஞ்சினான்.

உமைபாலன் கோபம் ஆறினான்.

இருவரும் வெளிப்புறம் வந்து நின்றர்கள்.

“சாப்பாட்டுக்கு நேரமாயிடுத்து... உள்ளே டேபிள் - நாற்காலியையெல்லாம் செட்டிலா ப் போட்டாச்சாடா? ...ஆத்திலேருந்து வந்ததுகளையும் உள்ளவே போட்டுடணும்டா!"என்றார் முதலாளி.

“ஆத்திலேருந்து மேஜை - நாற்காலி கூடவா வரும்?" என்று ஜெயராஜ் “ஜோக் அடிக்க, மற்றவன் ரசித்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பொருளுடன் பார்த்தனர். பேச்சுக்குப் பேச்சு 'டா’ போட்டுப் பேசினாரே, அதற்காகவா ?

காரியம் என்றால் உமைபாலனுக்கு எப்போதுமே கண். அவன் உள்ளே போய்த் திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/30&oldid=1163077" இலிருந்து மீள்விக்கப்பட்டது