பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
எச்சில் இலை

ம் ; உமைபாலன் பேயறை பட்டவனாகத் தான் வாய்ச்சொல் ஏதுமின்றி, வாய்ச் சொல்லுக்கு ஏது எதுவுமின்றி அப்படியே நிலைகலங்கி நின்று விட்டான் ! ...

உமைபாலன் தன் கடமையின் பேரில் அந்த எச்சில் இலைகளை எடுத்துத் துப்புரவு செய்ய வேண்டியிருக்க, அவனுக்குப் பதிலாக, அந்தப் பணக்காரப் பெரிய மனிதர் அந்த எச்சில் இலைகளை அவ்வளவு அவசரமாக எடுத்துப் போட்டுச் சுத்தம் செய்த நிகழ்வு அங்கே ஒரு பெரும் பரபரப்பையும் அதிசயத்தையும் விளைவித்தது.

இச் செய்தியைச் சரக்கு மாஸ்டரும் செர்வர் மணியும் சொல்லக் கேட்டு, வேகமாக வந்தார் பெரிய ஐயர். தற்செயலாக, கோபுவும் வந்துவிட்டான்.

அற்பம் என எண்ணப்படும் சிறிய சம்பவம், ஒருவனது வாழ்கையில் மகத்தான திருப்பத்தை உண்டாக்கக்கூடும். இதற்கு உதாரணமாக, எத்தனையோ பெரிய மனிதர்களின் வாழ்வு ஏடுகளிலே இடம் பெறவில்லையா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/37&oldid=1165271" இலிருந்து மீள்விக்கப்பட்டது