பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

கப்பட்ட சில்லரைகளை வாங்கினான். அவன் யதேச்சையாகத் திரும்பிய பொழுது, ஏன் அவன் முகம் அப்படி வேர்த்துக் கொட்ட வேண்டும் ? ...

கத்தரி வெயிலுக்கென்று இப்படியொரு மகிமையா ?

ஜெயராஜ் ரொம்பவும் சுருக்காகவே திரும்பி விட்டான். நாடகத்தின் முழு விவரத்தையும் அறிய வேண்டாமா? வந்ததும், டிக்கட்டுகள் விற்ற பணத்தை முதலாளியிடம் சமர்ப்பித்தான், அவன் போய்த் திரும்புவதற்குள் எந்த ரகசியமும் இடம் பெற்றுவிடவில்லை யென்பதையும் தன் சேக்காளிகள் மூலம் புரிந்துகொண்டான்.

கைக்குட்டையில் முகத்தைப் புதைத்த வண்ணம் அப்படியே நின்றிருந்தார் காரைக்கால் ஆசாமி.

உமைபாலனே அங்கிருந்து நகர்ந்துவிட்டான், கிராப்பை ஒதுக்கியபடி !

இந்தப் புதிர்க் குழப்பத்துக்கு ஏற்ற நேரம் இதுவல்லவென்றும், இப்படியே இந்நிலை நீடித்தால், 'பிஸினஸ்' கெட்டுவிடுமென்றும் அறிந்துணர்ந்த முதலாளியும் அவர் பிள்ளையும்; இரவு கடை அடைக்கும் நேரத்துக்கு வரும்படியும் காரைக்கால் அன்பரிடம் சொல்லி யனுப்பினார்கள்.

உடம்பு சரியில்லையென்று அரை நாள் லீவு வாங்கிகொண்டு போனான் ஜெயராஜ்.

காலம் கரைந்தது.

இரவு மணி ஒன்பது.

விளக்குகள் பிரகாசமாக எரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/40&oldid=1165363" இலிருந்து மீள்விக்கப்பட்டது