பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இரண்டாந்தாரம் பண்ணிக்கிட்டேன். அதுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் தான். ஒரு நாள் இவனோட சின்னம்மா என்னமோ சொல்ல, இவன் அவளை எதிர்த்துப் பேச , புத்தி தப்பியிருந்த நான் இவனை அடிக்கப்போக... ஐயையோ, இப்ப நான் - நிலைகுலைஞ்சு, என் மகனே எனக்கு இல்லைன்ன ஆயிடுமோ என்கிற துர்ப்பாக்கிய நிலைமையிலே நிற்கிறேனுங்க!... பகவான் என்னை ஏன் தான் இப்படிச் சோதிக்கிறானோ?... இவனுக்குள்ள சொத்து நாலு தலைமுறைக்குக் காணும்; இவன் வந்து இங்கே பெயரை மாற்றிக்கிட்டு, தன்னையும் மாற்றிக்கிட்டு அடிமை வேலை செய்யணுமா?...சரி!... ரொம்பக் கெட்டிக்காரப்பிள்ளை, என் பேரைச் சொல்ல வைப்பான்னு கனவு கண்டேன். ஆனா இப்படி என்னை ஏமாத்துகிறானே!.... தெய்வமே!... இதோ பாருங்க, இதுங்களை! -”

மூச்சு இரைத்தது. அவர் கொணர்ந்த முடிச்சை அவிழ்த்தார்.

"எல்லாம் தங்க நகைகள்! எல்லாம் இவனுடையது!.... இது தேதி வச்ச கடிகாரம்!"

ஒவ்வொன்றாகக் காட்டினார். அவன் காணாமல் போனவுடன் அவன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் செய்த தாளையும் காண்பித்தார்.

"தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நீங்க ஊருக்குப் போங்க!... உங்க பையன் தான் இவன். எனக்குப் புரியுது. வரட்டும்!... பாசத்துக்கு மகிமை ஜாஸ்தி, நான் உங்க மகனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கறேன். கவலைப்படாமல் நீங்க போங்க ஊருக்கு.... அவன் மனம் சட்டென் மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/43&oldid=1282398" இலிருந்து மீள்விக்கப்பட்டது