பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


நல்ல, அழகிய, உயர்ந்த சட்டைகள், ட்ரவுசர்கள் இருந்தன. அடியில் ரூபாய் நோட்டுக்கள் சில இருந்தன. மொத்தம் இருபது ரூபாய்! - சில்லறைகள் வேறு! எல்லாவற்றையும் பார்த்ததும், “நிஜமாகவே - இவன் பெரிய இடத்துப் பிள்ளைதானோ?” என்ற - குழப்பம் அவரை உலுக்கியது. இன்னும் நன்றாகப் பெட்டியை அலசினார்.

ஒரு முகமூடி காணப்பட்டது.

அடியில் ஒரு சீசா இருந்தது. மூடியைத் திறந்தார்.

'குப்'பென்று அடித்தது வாசனை - நாற்றம்! அதில் இருந்த எழுத்துக்களைப் படித்தார். ஏதோ ஒரு வகை பிராந்தி வைக்கப்பட்டிருந்த வெறும் சீசா போலும்! “சே, சுத்த ரௌடிப்பயல் ... காலிப் பயல்!” அவரது பற்கள் சத்தம் பரப்பின. “இவனுக்கு இந்தச் சனியன் எல்லாம் ஏது? ... நம்ம கடைப் பேரையே கெடுத்துடுவான் போலிருக்கே!” என்று வருந்தினார்.

உள்ளே எட்டிப் பார்த்துத் தலையை நீட்டிய அப்துல்லாவுக்கு நல்ல அடி கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/46&oldid=1282404" இலிருந்து மீள்விக்கப்பட்டது