பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஜெயராஜ் சொன்னான்: அவனுடைய பெயர் காத்தான்; சேரிச் சாம்பான் அவன் தகப்பன். சாப்பாட்டு டிக்கட்டுகள் இரண்டை அவன் விற்றுப் பணம் திருடினான். இப்போது சில நாளாக, ஒருவனுக்குப் பிராந்தி பாட்டில்களை பெரிய மனிதர்களிடம் ரகசியமாக விற்க உதவினான். பணம் கிடைத்தது அதில். அதன் காரணமாக, இப்போது போலீஸ்காரரிடம் வசமாக அகப்பட்டுக்கொண்டான். போலீஸ்காரரோ, அவனை ஐயருக்காக ஒரு முறை இப்போது மன்னித்துள்ளார்.

“இந்த நாளிலே பிள்ளைகள் வரவரக் கெட்டுப் போயிடுச்சு கான்ஸ்டபிள் ஸார்!.... வரவர லோகத்திலே நடிப்பும் வேஷமும்தான் மலிஞ்சுடுத்து. பாருங்களேன் இவனை!.... முளைச்சு மூணு இலை விடலே, அதற்குள்ளாற சட்டத்தையே ஏமாத்த ஆரம்பிச்சுட்டானே!... என்னமோ, உங்க இரக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க இவனை இவன் அப்பன் கிட்ட ஒப்படைச்சுட்டா, நம்ம தண்டா விட்டுது!...”

மனம் நொந்து பேசினர் பெரியவர். வந்த சினத்தை அட்க்கிக்கொண்டார்.

ஜெயராஜ் கூனிக் குறுகி நின்றான்!...

உமைபாலன் டபரா - தம்ளர்களை எடுத்துச் சேகரம் செய்துகொண்டிருந்தான்.

அப்போது:

வாசலில் ஒரு கூச்சல் கேட்டது.

எல்லோரும் வெளியே ஓடிவந்தார்கள்.

பிச்சைக்காரச் சிறுமி பூவழகி பதற்றத்துடன் கதறினாள்:“ஐயையோ, ஓடியாங்க!...ஓடியாங்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/49&oldid=1319053" இலிருந்து மீள்விக்கப்பட்டது