பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வம் மனமிரங்கிட்டுது!"- உணர்ச்சி வசப்பட்டு நின்றார் அவர்.

உமைபாலன் தன் தங்கையை வாரியெடுத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையைத் தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு, அவர் பாதங்களிலே விழுந்து விம்மினன். “நான் பாவி... உங்க மனசைப் புண்படுத்திட்டேன்; பொய்யும் சொல்லிப்பிட்டேன். . . !" என்று தலையில் அடித்துக்கொண்டான்.

பதறினார் செங்காளியப்பன். “நீ எங்களுக்குக் கிடைச்சதே பெரிய பாக்கியம் அப்பா! உனக்காக நாங்கள் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாதப்பா!... நடந்ததுகளை மறந்திடு. இனி நான் உன் மனசு கோணாம நடப்பேன் தம்பி !..."என்று பாசத்துடன் சொன்னாள் அவனது சின்னம்மா..

“அம்மா!” என்று விம்மினான் உமைபாலன். அவன் தன்னுடைய அன்புச் சிற்றன்னையின் பாசப் பிடியில் கட்டுண்டு கிடந்தான்.

ஏழைச் சாம்பானிடம் மன்னிப்பு வேண்டினர் கனபாடி. “உம் பையனைப் புது பையனாகத் திருத்திக் கொண்டுவந்து சேரும்!” என்றார், கண்டிப்புடன்!

மகனுடன் ஊருக்குப் புறப்படுவதற்கு உத்தரவு கோரினர் செங்காளியப்பன். ஆஹா, அவரது முகத்தில்தான் எத்துணைக் களிப்பு : எத்துணை நிறைவு! உடனே, உமைபாலன் வேலைசெய்த நாட்களைக் கணக்கிட்டு அதற்குரிய சம்பளத்தை உறையிலிட்டு நீட்டினர் ஐயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/53&oldid=1140743" இலிருந்து மீள்விக்கப்பட்டது