பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சபாபதி

17


சபாபதி சங்கீதம் கற்றது.
ஒரு துணுக்கு

நாடக பாத்திரங்கள்.-சபாபதி முதலியார், சபாபதி, கிருஷ்ணசாமி முதலியார்,

இடம்:—A room in Sabapathy Mudaliar's house

Enter Sabapathi Mudaliar.

S. M.
What is this வவுத்தெரிச்சல்! I must learn this, இல்லாப் போனா all useless, ஒண்ணும் பிரயோஜனமில்லை. மச்சான் பாடரான், எனக்குப் பாடத் தெரியாதுண்ணா, அவமான case ஆயிருக்குது! -அடே சபாபதி!
Enter Sabapathi.
ச.
ஏம்பா.
S. M.
அடே சபாபதி, இந்தப்பக்கம் கதவண்டை நிண்ணுக்கினு ஒர்த்தரையும் உள்ளே உடாதே, யாரானா வந்தா அய்யா ரொம்ப வேலையாயிருக்கிறார், இண்னு சொல்லி விடு-போ.

(Exit Sabapathi)

S. M.
(Begins singing) அங்கிங்கெனாதபடி-

Re-enter Sabapathi.

ச.
ஏம்பா, என்னா வேலையாயிருக்கிறார் இண்ணு கேட்டா என்னா சொல்றது? அத்தே சொல்லல்லெயே யப்பா.
S. M.
அதெல்லாம் உனக்கென்னா? அது ரகசியம், ஒருத்தருக்கும் சொல்லக்கூடாது, போ.
ச.
எனக்கு மாத்திரம் சொல்லிடு அப்பா, நானு ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன்.
S. M.
Damn it! உனக்குக் கூட சொல்லக் கூடாது. போ.

(Exit Sabapathi)

S. M.
(Begin singing)அங்கிங்கெனாதபடி-
ச.
ஏன்? (from within)

Re-enter Sabapathi.

ச.
என்னெ கூப்டையா யப்பா?
S. M.
நான் கூப்டலையே.
ச.
என்னமோ கூச்சல் கேட்டது-நீ கூப்டையாங் காட்டிக்கினு நினைச்சிக்கினே.
S. M.
Nonsense, போ வெளியே!
ச.
இல்லே யப்பா, நீ கோவிச்சிக்காதே, ஒரு சந்தேகம் கேட்டுக்கினு போலாம்னு வந்தேன்.
S. M.
என்னாடா அது சந்தேகம்?
ச.
யாரானா வந்தாதான் வேலையாயிருக்கிரே இண்ணு சொல்லணும், யாரும் வராப்போனா என்னா செய்யரது? அத்தே மாத்தரம் சொல்லிடப்பா.
S. M.
ஏண்டா மடையா இது கூடவா நான் சொல்லணும், யாரும் வராப்போனா நல்லதாச்சு.