பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சபாபதி

ச.
யாரும் வராப்போனா நல்லதாச்சோ, சரி, (போகிறான்)
S. M.
(பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனாபடி-

சபாபதி மறுபடி வருகிறான்.

ச.
நல்லதாச்சப்பா, நல்லதாச்சப்பா!
S. M.
என்னாதுடா அது? என்னா நல்லதாச்சு?
ச.
நீ தாம்பா சொன்னே; யாரும் வராப்போனா நல்லதாச்சிண்ணு. ஒர்த்தரும் வல்லெ அப்பா, ரொம்ப நல்ல தாச்சு!
S. M.
ஏண்டா Idiot! அத்தே சொல்லரத்துக்கா வந்தே இங்கே? இன்னொரு தரம் இந்த பக்கம் வந்தேண்ணா உன் மண்டயே ஒடச்சுடுவேன் போ. (சபாபதி போகிறான்)
S. M.
(பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி-

வேறு வழியாக சபாபதி மறுபடி வருகிறான்.

ஏண்டா! தடிக்கழுதை!-
ச.
என்னாப்பா சும்மா கோவிச்சிக்ரே! அந்த பக்கம்தானே வரக் கூடாது இண்ணே, இந்த பக்கங்கூடமா வரக் கூடாது இண்னே?
S. M.
என்னா regular idiot ஆயிருக்கிறான்! இவனைக் கட்டிக் கினு அழ வேண்டியதாயிருக்கிறது. என்னாத்துக்குடா வந்தே இங்கே!
ச.
(Smiling) இல்லேப்பா, உன் ரகசியம் கண்டு புடிச்சுட்டேம்பா -நீ பாட்டு பாடரேயப்பா.
S. M.
இருந்தா என்னடா! போ! உன் வேலையை பார்! (சபாபதி போகிறான்.)

(பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி

சபாபதி மறுபடி வருகிறான்.
ச.
(crying) எம் மண்டயே ஓனும்ணா ஒடச்சூடப்பா! என்னாலே வெளியிலே யிருக்க முடியலே யப்பா!
S. M.
ஏண்டா?
ச.
நீ பாடரத்தே கேட்டா எனக்கு கூட கொஞ்சம் பாட்டு வருதப்பா.
S. M.
கொஞ்சம் பாட்டு வரதாவது! போயா beggar வெளியே, (அவனை வெளியே தள்ளி கதவை சாத்துகிறார்.)
(பாட ஆரம்பிக்கிறார், அங்கிங்கெனாதபடி-
ச.
(Sings outside) அங்கிங்கெனாதபடி-
S. M.
(Opens the door and drags Sabapathi by the ear) ஏண்டா,-என்னா செய்யரே வெளியே?-
ச.
நா மின்னேயே சொன்னனே யப்பா. நீ பாடரத்தே கேட்டு எனக்கு கூட கொஞ்ச பாட்டு வந்தது, பாடனேயப்பா,