இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சபாபதி
19
S, M. | இன்னொரு தரம் நீ பாடனையா, உன்னே ஓத ஒதணு ஒதச்சி, அறை அறை இண்ணு அறைஞ்சி, குட்டு குட்டுண்ணு குட்டி, கும்மு கும்முண்ணு கும்மி dismiss பண்ணிடுவேன். | |
---|---|---|
ச. | என்னெ ஒதெ ஒதெண்ணு ஒதச்சு, அறை அறை இண்ணு அறைஞ்சி, குட்டு குட்டுண்ணு குட்டி, கும்மு கும்முண்ணு கும்மி, dismiss பண்ணிவிடுவெயல்லா! | |
S, M. | ஆமாம் ! (அவனை வெளியே தள்ளித் கதவைத் தாள் இட்டு பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனாபடி- | |
ச. | (கதவை தபதபவென்று தட்டுகிறான்) அப்பா! அப்பா! | |
S, M. | What a nuisance! என்னடா அது (opens the door) | |
ச. | நான் இங்கிருந்தே சொல்ரேயப்பா, உள்ளே வந்தாதான் மண்டயே ஒடச்சூடு வேண்ணையா. ரொம்ப அவசரமான சமசாரம் அப்பா. | |
S, M. | என்னடா அவ்வளவு அவசரமான சமாசாரம்! உள்ளே வந்து சொல். சபாபதி உள்ளே வருகிறான், | |
ச. | நீ தப்பா ஒண்ணு நெனச்சிக்காதே அப்பா, இப்பவே சொல்லிட்டே, அப்பரம் என்மேல் கோவிச்சிக்காதே. | |
S, M. | என்னாடா அது? சீக்கிரம் சொல். | |
ச. | நம்ப வண்ணா வந்திருக்கிறான் அப்பா-வாஸ்த்தவமா வந்திருக்கிறான் அப்பா. | |
S, M. | ஏண்டா அதனப்பிரசங்கி- (அவனை அடிக்கிறார்) | |
ச. | (Crying) இதுக்குதாம்பா அப்பவே சொன்னே! என்னையேம்பா சும்மா அடிக்கிரே! நான் அப்பவே தப்பா நீ நெனச்சிக்கக் கூடாது இண்ணு சொன்னேனாயில்லையா? நான் என்னா உன் பாட்டே கேட்டு வண்ணா வந்தாண்ணு சொன்னேனோ? வண்ணான் சலவே கொடுக்க வந்தாண்ணு சொன்னே, சும்மா என்னே அனியாயமா அடிச்சையா, உனக்கு பாட்டே வராது போ! | |
S, M. | இல்லே, இல்லே போ, நீ நல்லவந்தான் போ, உன்னே நான் அடிக்கலே போ. | |
ச. | ஆ! அப்படி என்னெ சமாதானப் படுத்தினேயிண்ணா உனக்கு பாட்டு சீக்கிரம் வரும். அப்பா, நான் ஒரு யுத்தி சொல்லித் தர்ரேன். இப்படி யெல்லாம் பாட்டு வராதப்பா உனக்கு. ஒரு அமோனியா பொட்டி வாங்கி வச்சிக்கோ. அப்பதாம் வரும். | |
S, M. | அதென்னாடா அது? அமோனியாப் பெட்டி என்னடா அது! | |
ச. | Shopலே விக்குது அப்பா அமோனியா பெட்டி, | |
S, M. | ஓ! அதுவா? Alright, அப்படியே செய்ரேன். |