இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
சபாபதி
(Takes out his pocket book and writes a memo). “Please send per bearer a box of Ammonia in my account.” அடே, எதிர் ஷாப்லே போய் வாங்கியாடா இதே. ஜாக்கிரதையா தூக்கிக்கினு வா. (சபாபதி போகிறான்.) இந்த வாத்தியப்பெட்டி வர்ரவரைக்கும் சும்மா பாடிகினு இருப்போம். (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி- சபாபதி மறுபடியும் வருகிறான். | ||
ச. | (Brings a bottle of Ammonia)ஏம்ப்பா நீ என்னாப்பா எழுதனே? நான் அமோனியாப் பெட்டி கேட்டாக்கா, இத்தே கொடுத்தாம்பா அந்த கழுத மகன்! | |
S. M. | என்னாடா! இந்த மருந்தே வாங்கி யாந்தயே! | |
ச. | இதாம் எழுதினாரு இண்ணு சொன்னான். இல்லை ஐயா, வாத்தியப் பெட்டி ஓணும்னு சொன்னே. போடா, உனக்கு ஒண்ணும் தெரியாது இண்ணு என்னை கல்தா கொடுத்தனுப்பிச்சான். | |
S. M. | போனாப்போவுது. இது வாணாம்னு சொல்லி திருப்பி கொடுத்தூட்டு வந்தூடு. | |
ச. | என்னாத்தேயப்பா திருப்பி கொடுக்கரது? மருந்தையா கல்தாவையா? | |
S. M. | (சபாபதிக்கு ஒரு கல்தா கொடுக்க அவன் கூச்சலிட்டுக் கொண்டே போகிறான்.) அப்பா, இனி மேலே வர மாட்டான்! (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி- கிருஷ்ணசாமி முதலியார் வருகிறார், அவர் பின்னால் சபாபதி மறுபடி வருகிறான். | |
கி. | என்னா அத்தான், காபுரா பண்ணிகினு இருக்கிறீங்கள்? | |
S. M. | வா அப்பேன் வா!-வேறொண்ணுமில்லே, இந்த fellow பாட்டு கத்துகோணுமிண்ணா, அதுக்கோசரம் அவனுக்கு பாட்டு கத்து கொடுத்துகினு இருக்கிறேன். | |
கி. | சபாபதியா பாட்டு கத்துகினு மிண்ணா? ஏண்டா, என்ன. கத்துகினே? பாடு கேப்போம். | |
S. M. | பாட்ரா ! (சபாபதிக்கு கண் அடிக்கிறார்). | |
ச. | (பாடுகிறான்.) அங்கிங்கெனாபடி- அவ்வளவுதாம் பாட்டு கத்து கொடுத்தாருங்கோ. | |
கி. | அவ்வளவு போதும் இண்ணைக்கி, சாப்பாட்டுக்கு நாழி ஆச்சி! வாங்க போகலாம். (எல்லோரும் போகிறார்கள்) |
காட்சி முடிகிறது.