இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
சபாபதி
S. M. | எனக்குத் தெரியாதப்பேன். | |
---|---|---|
K. | என்னமோ தெரிஞ்சவராட்டம் business எல்லா விசாரிச்சைங்களே? | |
S. M. | ஒரு உடூஸ் உட்டு பாத்தேன். வேறெ என்ன பேசறது? என்னாப்பேன்-இன்னும் கலெக்டர் வரலே? | |
K. | He will positively come! You see he has to come a long distance. Enter Venkatasawmy Naidu. | |
S. M. | வாங்க நாயுடு! என்ன நாயுடுகாரு.-Indian Dressலே வந்தைங்களே! | |
V. N. | லேது! மீ கார்ட்லோ ஆர். எஸ். வி. பி. அனி ராசியுண்டிந்தே. அனி டிரெஸ்லோ ஒஸ்தினி. | |
S. M. | ஆர். எஸ். வி. பி. இன்னா என்னா அர்த்தம்? | |
V. N. | ரசம்-சாம்பார்-வடை- பாயசம் - அனி தலுக் கொண்டினி. | |
S. M. | ரொம்ப புத்திசாலி-நாயுடுகாரு-தீனிகிதா இங்கிலீஷ் சது வவலெ அனேதி. ஆர். எஸ். வி. பி. அண்டே Refreshments served very punctually அனி அர்த்தம். மீரு அட்ல போய் கூர்சண்டி, வஸ்தானு. | |
K. | என்னா அத்தான்? R. S. V. P. இண்ணா அப்படியா அர்த்தம்? reply if you pleaSe இன்னு சொல்ராங்களே. | |
S. M. | அதெல்லாம் முன்னே அர்த்தம், இப்போ அந்த அர்த்தம் எல்லாம் மாறிப் போச்சு. -அடே சபாபதி! இங்கே வாடா! சபாபதி அருகில் வருகிறான், என்னடா செய்யரே அங்கே? | |
ச. | காபி எல்லாம் சரியா இருக்குதா இண்ணு பார்த்தேம் பா ! | |
S. M.. | Stupid goose! என்னா ஒதேகிதே கேக்குதா என்னா? இப்போ ஒண்ணும் தொடக்கூடாது! நீ கடைசியிலே மீந்தா என்னமானா சாப்பிடு. | |
ச. | அப்படித் தாம்பா போனதடவெ கூடச் சொன்னெ-ஒன் சிநேகிதருங்க ஒண்ணும் மீாவைக்கமாட்டாங்கப்பர்! | |
S. M. | அதெல்லாம் - ஒதவாது - ஒண்னும் தொடாதே. இப்போ. அதிருக்கட்டும். இப்பொ கலெக்டர் வரு |