இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சபாபதி
3
வாரு சீக்கிரம் அவர் எதிருக்க-உன்னோடே இங்கிலீஷ்தான் பேசுவேன் தெரியுமா? | ||
ச. | எனக்கு இங்கிலீஷ் தெரியாதே அப்பா. | |
S .M. | அதெல்லாம் கஷ்டம் இல்லெடா-நான் வந்து Boy இண்ணு கூப்பிடுவேன். நீ சார் இண்ணு சொல்லணும் - அவ்வளவு தான். | |
ச. | ரொம்ப சுலபம்பா இந்த இங்கிலிஷ-!-நீ பாய்-நான் சார்!-அவ்வளவு தானே. | |
S. M. | நான் பாய் ! நீ சார் ஆ! என்னாடா அது? | |
ச. | அதாம்பா, நீ பாய் இண்ணு கூப்பிட்டா நான் சார் - இண்ணு சொல்லணும். | |
S. M. | அப்படி சொல்ரையோ? அதுவும் சரிதான்-என்னாப்பேன். இந்த கலெக்டர் இன்னும் வரலெ! அதுக்கோசரம் நம்ப guestsகளே காக்க வைக்கிறது தப்பு- Gentlemen, you will kindly have some tea, (guests begin to partake of refreshments) | |
K. | அத்தான், அதோ கலெக்டர் வர்ராப்போலே இருக்குது. நான் அப்புறம் வருகிறேன். (exit) | |
S. M. | Yes Yes! அடே சபாபதி-நீ தூரமாயிரு. Enter Mr. Forty, Collector of Saidapet. | |
F. | Hullo! Sabapathy, How do you do? | |
S. M. | I do very well, Your Honour. | |
F. | Well Sabapathy—I see you have been nominated a member of the Legislative Council. Let me congratulate you! I wish you more honours in the future. | |
S. M. | All your Honour’s favour. | |
F. | I say Sabapathy, I am sorry I am late; I had a small accident in the way. The fan belt of my car broke and I had to look to it. | |
S. M. | I am glad your honour—I mean—What I mean is, that I am glad that the fan belt broke and— not your honour. | |
F. | By the bye, have you ever had an accident with your car? | |
S. M. | Only yesterday I escaped a very serious accident, your honour. |