பக்கம்:ஓலைக் கிளி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


நிச்சயமாகக் கண்டுபிடித்து வருவேன். ராணியம்மாளின் உத்தரவிற்காக இல்லாவிட்டாலும் காட்டிலே நடக்கிற திருட்டை அடக்குவது அரசருக்கும் அவருடைய மக்களுக்கும் கடமையல்லவா ?” என்று அண்ணன் தைரியம் கூறி விட்டு, இரவிலே காவல் புரிவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்தான். அவன் கையிலே தனது வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டான். இடையிலே கச்சை கட்டி, அதிலே உடைவாளைத் தொங்கவிட்டுக்கொண்டான்.

ஆனால், அவனால் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியோ அவனையும் ஏமாற்றிவிட்டுத் திருட்டு


நடந்துவிட்டது. அதனால், அவன் பாதாளச்சிறையில் அடைபட்டான். சிறைக்குள் போவதற்கு முன்பு தன் தம்பிகளைப் பார்த்து ஒருவிஷயம் சொல்ல அவன் விரும்பினான். ஆனால், ராணி அதற்கு அனுமதி தரவில்லை. அரசகுமாரன் தன் தந்தையிடம் கெஞ்சிப் பார்த்தான். அரசன் ராணியின் உத்தரவுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய விருப்பமில்லாமல் பேசாமல் இருந்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/18&oldid=1027475" இலிருந்து மீள்விக்கப்பட்டது