பக்கம்:ஓலைக் கிளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

படி செய்வாயா ? நீ இந்தத் தாமரைப்பூவைக் கொண்டு வராமலிருந்தால் அவர்கள் சுகமாக இருப்பார்களே !” என்று அவன் கேட்டான்.

“கண்ணே, அவர்கள் எல்லாம் சிறையில் அடைபட்டதால் எனக்கு மிகவும் வருத்தந்தான். ஆனால், அவர்கள் உன்னைப் போல என்னிடத்தில் இரக்கம் காட்டவில்லையே! இரக்கம் காட்டியிருந்தால், இங்கே அழைத்து வந்திருப்பேன். முன்பு நான் ராணியாக இருந்தபோது இந்த முருகன் கோயிலுக்குத் தாமரைப்பூவை நாள்தோறும் அனுப்புவது வழக்கம். அதன்படியே கிளியாக மாறிய பிறகும் கொண்டு வந்து முருகனுக்கு வைக்கிறேன். முருகனுடைய அருளால் தான் நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்” என்றது கிளி.

"இந்தக் கிளி உருவத்தை மாற்ற முடியாதா ?" என்று விக்கிரமன் கவலையோடு கேட்டான்.

"அதற்குத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அதோ முருகனுடைய கையிலே ஒரு வேலிருக்கிறதல்லவா ? அதை எடுத்து என் தலையில் குத்து" என்றது கிளி.

விக்கிரமனுக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. கிளி இறந்துவிடுமே என்று பயந்தான்.

"விக்கிரமா, கவலைப்படாதே. முருகனைப் பணிந்து வேலை எடுத்துக்குத்து. உனக்கு உன் தாயார் வேண்டாவா?” என்றது கிளி.

விக்கிரமன் இதைக் கேட்டதும் தைரியமடைந்து கிளி சொன்னவாறே செய்தான்.

என்ன ஆச்சரியம் வேலை எடுத்துக் குத்தியதும் கிளி மறைந்து, விக்கிரமன் தாயார் எதிரே நின்றாள்.

அவள் விக்கிரமனைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள் "கண்ணே, வா. நாம் உடனே அரண்மனைக்குப் போயாக வேண்டும். அந்த மாயக்காரியின் வேடத்தை உடனே வெளிப்படுத்த வேண்டும். அவள் உன் அண்ணன்மார்களுக்கு ஏதாவது தீங்கு இழைக்க முயற்சி செய்தாலும் செய்வாள். அதற்கு முன்னே நாம் போக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/24&oldid=1027481" இலிருந்து மீள்விக்கப்பட்டது