பக்கம்:ஓலைக் கிளி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓலைக்கிளி


கூடை, முறம் கட்டுகின்றவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? மூங்கிலை நீள நீளமான தப்பைகளாகவும் ஈர்க்குகளாகவும் கிழித்து அவற்றைக்கொண்டு கூடை பின்னுவது ஆச்சரியமாக இருக்கும். அப்படிச் செய்கின்ற பல பேர்கள் சேர்ந்த ஒரு கூட்டம் இருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் அதிலே இருந்தார்கள். அவர்கள் ஊர் ஊராகச் சென்று, ஒவ்வோர் ஊரிலும் சில நாள்கள் தங்குவார்கள். தங்கி அங்கே தங்கள் தொழிலைச் செய்வார்கள். அவர்களுக்கு வீடு ஒன்றும் கிடையாது. போய்த் தங்குகிற இடத்தில் கூடாரங்கூடப் போட்டுக்கொள்ள மாட்டார்கள். வீடும் கூடாரமும் அவர்களுக்கு வேண்டியதில்லை. நல்ல நிழல் கொடுக்கும்படியான ஒரு பெரிய மரம் இருந்தால் போதும். அதனடியில் தங்கித் தங்கள் தொழிலைச் செய்து வயிறு வளர்ப்பார்கள். மூங்கிலில் வேலை செய்வதும் சோறு சமைத்துச் சாப்பிடுவதும் மரத்தடியிலேதான். அவர்கள் நீளமான மூங்கில்களை ஒரு கற்றையாகக் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். அந்த மூங்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/4&oldid=1027459" இலிருந்து மீள்விக்கப்பட்டது