பக்கம்:ஓலைக் கிளி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

வயதாக ஆகக் கிழவியால் மூங்கிலைத் தப்பையாகக் கிழித்துக் கூடை முறம் கட்ட முடியவில்லை. அவள் கைகள் தளர்ந்து போய்விட்டன. ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போவதே அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அந்தக் கூடைமுறம் கட்டும் உறவினர்களை விட்டுப் பிரிய முடியுமா ? பிரிந்தால் அவளுக்கு வேறு துணை யாரும் இல்லை. அதனால் எப்படியோ கஷ்டப்பட்டு அவர்களுடன் செல்லுவாள். அந்தச் சிறு பையனையும் அவளே தூக்கிக்கொண்டு போவாள். சில சமயங்களிலே அவ்விடத்திலே இரக்கங்கொண்டு சில பேர் அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/6&oldid=1027461" இலிருந்து மீள்விக்கப்பட்டது