பக்கம்:ஓலைக் கிளி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

பையனைத் துரக்கிக்கொண்டு வர உதவி செய்வார்கள். கிழவியால் ஊருக்குள்ளே தினமும் சுற்றிக் கூடை முறங்களை விற்கவும் முடியாது. சிறுவனாலும் நடக்க முடியாது. ஆதலால், அவர்கள் இரண்டு பேரும் மரத்தின் அடியிலேயே இருப்பார்கள். மற்றவர் அனைவரும் ஊருக்குள்ளே போய்த் தாங்கள் செய்த கூடை முறங்களை விற்பார்கள்.


கிழவியால் கூடை முறம் செய்ய முடியாவிட்டாலும்

பனையோலையைக்கொண்டு அழகான விளையாட்டுப் பொம்மைகள் செய்வதிலே அவள் கெட்டிக்காரி. ஓலையைப் பலவகையாகக் கிழித்தும், நறுக்கியும் அவள் பொம்மைகள் செய்வாள். கிலுகிலுப்பை உங்களுக்குத் தெரியுமா ? அதற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/7&oldid=1027462" இலிருந்து மீள்விக்கப்பட்டது