பக்கம்:ஓலைக் கிளி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


குள்ளே சிறிய கற்களைப் போட்டிருப்பார்கள். கிலுகிலுப்பையை ஆட்டினால் கிலுகிலு என்று சத்தம் உண்டாகும். அதைப் போல அவள் வேறு விளையாட்டுச் சாமான்களும் செய்வாள். சிறுவன் அவளுக்குப் பக்கத்திலே உட்கார்ந்து அவள் செய்வதையெல்லாம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பான். அவன் பெயர் தங்கவேல். கிழவி அவனைச் செல்லமாகத் தங்கம் என்று கூப்பிடுவாள்.


ஒரு சமயம் இந்தக் கூடைமுறம் செய்கிறவர்கள் கூட்டம் ஒரு சிறு கிராமத்திலே வந்து தங்கியது. அந்த ஊரிலே பணக்காரர்கள் நிறைய உண்டு. குழந்தைகள் புதிய புதிய விளையாட்டுப் பொம்மைகள் வேண்டும் என்று கேட்டார்கள். கிலு கிலுப்பை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்தக் கிழவி புதிதாகக் கற்பனை பண்ணி ஓலையாலே பின்னி ஓர் அழகிய கிளி செய்தாள். பச்சிலைகளையெல்லாம் பிடுங்கி வந்து அதற்கு அழகாகப் பச்சைச் சாயம் கொடுத்தாள். செம்மண்ணைக் கரைத்துக் கிளியின் முக்குக்கு அழகான சிவப்பு நிறம் கொடுத்தாள், அக்தப் பொம்மைக்கிளி பார்ப்பதற்கு உயிருள்ள கிளியைப் போலவே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/8&oldid=1027464" இலிருந்து மீள்விக்கப்பட்டது