இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓ! ஓ! தமிழர்களே!
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய, இவ்விழாவின் ஒரு பகுதியாகிய, அறிஞர்கள் பாட்டரங்கிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும். தலைவர் அவர்களே!
நீண்ட காலமாகவே தமிழினத்திற்கும் தமிழ் மொழி விடுதலைக்கும், தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றி வருகின்ற என் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பாச்செம்மல் அரு கோபாலன் அவர்களே! இங்கே தலைமையுரையாற்றிய தமிழின விடுதலைக் கழக நெறியாளரும் பேரறிஞருமாகிய இராமதாசு அவர்களே காலையில் பாவரங்கத்தில் கலந்து கொண்டு. இருக்கிற பாவலர் பெருமக்களே! இளையோர் அரங்கத்திலே மிகச்சிறந்த கருத்துகளை வழங்கிய பறம்பை அறிவனார் அவர்களே! செல்வி முத்து வள்ளியம்மை அவர்களே! தஞ்சைப் பல்கலைக் கழகத்திலே அகரமுதலித் தொகுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருக்கிற சொல்லாய்வறிஞர் அருளி