பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஓ! ஓ! தமிழர்களே!

கின்ற- வகையிலே, மிகச் சிறந்த நூல் என்ற நிலை இருந்தாலும்கூட, அது நமது தமிழ் இனத்திற்காகப் பாடிய நூல் என்பதை மறந்துவிடக்கூடாது; மறுக்கவும் முடியாது

ஓர் இனத்தின் வரலாற்று நிலையிலே, ஏதோ ஒரு வகையிலே, தன் நிலையைத் தமிழினம் இழந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துதான் திருவள்ளுவர் திருக்குறளைப் பாடினார். வேறு இலக்கியங்களைத் திருக்குறளோடு ஒப்ப வைத்துப் பார்க்கிறபோது, இது ஏதோ ஒரு புதுமையான இலக்கியம் செய்யவேண்டும் என்பதற்காக அவர் இதைச் செய்ததாகத் தெரியவில்லை

'சிற்றினம்' என்று திருவள்ளுவர்
யாரைக் குறிப்பிடுகிறார்?

இதில் "சிற்றினம் சேராமை" என்ற ஒர் அதிகாரம் இருக்கிறது. அறத்துப் பாலிலே ஆயிரக்கணக்கான குறிப்புகளை என்னாலே கொடுக்க முடியும், ஆனால் அது திருக்குறளைப் பற்றிய சொற்பொழிவாகப் போய்விடும் என்பதால் அவற்றையெல்லாம் நினைவுகூர விரும்பவில்லை. இந்தச் "சிற்றினம் சேராமை" என்றால் என்ன...இன்றைக்குவரை நமக்கு என்ன பொருள் சொல்லப்படுகிறது. சிறிய இனத்தவர்களோடு சேர்ந்து கொண்டு. அரசன் தன்னுடைய ஆட்சி அமைப்புகளை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டதாக நாம் நினைக்கிறோம். அவ்வாறு இல்லை

திருவள்ளுவருடைய நோக்கிலே பெரியவர்கள் சிறியவர்கள் என்கிற நிலை,தன்மை இருந்தாக நமக்குத் தெரியவில்லை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்ற சிறந்த