பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

9

மெய்ப்பொருள் உணர்வைப் பெற்று, மெய்யுணர்வைப் பரப்பிய ஆசிரியர் திருவள்ளுவர். அவர் சொன்ன "பெரியாரைப் பிழையாமை" என்கின்ற அதிகாரம்; அதே போல் "சிற்றினம் சேராமை" என்கின்ற அதிகாரம்: ஆக இரண்டை மட்டுமே சீர்தூக்கிப் பார்த்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். "சிற்றினம்" என்று சொல்லுவது தாழ்ந்த தன்மையுடைய குணநலன்களிலே மிகவும் எளிமையாக இருக்கின்ற தீயவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள், நடைமுறையிலே இழிந்தவர்கள் என்றெல்லாம் பொருளில்லை. அப்படி ஒரு மக்கள் இனத்தைப் பிரிக்க வில்லை, திருவள்ளுவர். சிற்றினம் என்பது சிறுபான்மை மக்கள் (minority people). அதை நீங்கள் நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ளவேண்டும். இன்றைக்கு யார் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்கள்? அன்றைக்கும் அவர்கள்தாம் சிறுபான்மை மக்கள். நூற்றுக்கு மூன்று விழுக்காடு என்று நாம் எந்த இனத்தைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறோமோ, அவர்கள்தாம் "சிறிய இனம்". அந்தச் சிறிய இனத்தவர்களிடத்திலே அரசர்கள் இணங்கிப் புழங்கிக்கொண்டு. இந்தத்தமிழின மக்களைத் தாழ்த்துகிற அந்த வரலாற்று நிலை நடந்து கொண்டிருந்தது. அன்று திருவள்ளுவர் அதை எச்சரித்திருக்கிறார். சிற்றினம் சேராமை என்று அதற்கு முன்னால் நீங்கள் எங்கேயாவது எந்த இலக்கியத்திலாவது இந்தச் சொல்லைக் காட்ட முடியுமா?

இதை எதற்குச் சொல்லுகிறேன். திருக்குறளிலே என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விரிவாகச் சொல்லத் தொடங்கினால், இந்த இனத்தினுடைய தன்மைகள் அப்படியே-அந்தக் காலத்திலே, தொடக்கத்திலே எப்படி இருந்ததோ அப்படியே தெளிவாகக் கண்ணாடி போலப் பார்க்கலாம். அதையே மூடி மறைத்து விட்டார்கள். அது பெரிய தர்ம நூல்,அற