பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஓ! ஓ! தமிழர்களே !

நூல் என்றெல்லாம் பெருமைப் படச்சொல்லி, ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டார்கள். நாம் உணராதபடி ஆக்கிவிட்டார்கள்

ஏற்பட்டுவிட்ட தமிழின வீழ்ச்சி!

இவற்றையெல்லாம் எதற்குச் சொல்கிறேன். ஒரு பார்வைக்காக ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். இந்த இனம் இன்றைக்கு நேற்றன்று;வீழ்த்தப்பட்ட அந்த நிலை. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீழ்த்தப்பட்டது. அதற்கும் இந்த நாட்டிலே வந்த வேற்று இனத்தவரான ஆரியர்களுடைய வருகைக்கும் தொடர்பு இருந்தது. இதை யாரும் மறுக்கமுடியாது. அதற்கு முன்னால் இருந்த தமிழினத்தினுடைய தன்மைகள் பெருமைக்குரியனவாக இருந்தன என்பதை நாம் பார்க்கிறோம். தமிழ்மொழியினுடைய தன்மை மிகச் சிறந்திருந்தது. அதையும் பார்க்கிறோம். படிப்படியாக அந்த நிலைகள் தாழ்த்தப்பட்டு-வீழ்த்தப்பட்டு- இழிக்கப்பட்டு-மறக்கடிக்கப்பட்டு-இந்த இனம் ஒர் ஏமாளித் தன்மைகொண்ட இனமாக - அடிமை இனமாக-உரிமையற்ற இனமாக-ஆக்கப்பட்ட நிலைகள்தாம் இடையிலே வந்த வரலாறுகள். கம்பன் காலத்திலே-சமய நிலைகளெல்லாம் விளங்கி நின்ற காலங்களிலே. அதற்குப் பின்னாலே வேற்று அரசர்கள் இங்கு வந்து ஆண்ட காலங்களிலே, அதற்குப் பின்னால் இந்தியாவைச் சேர்த்து இந்தத் தமிழினம் அடிமைப்பட்ட அந்த நிலைகளியிலே, இன்றுவரை இந்த இனத்தினுடைய வீழ்ச்சி படிப்படியாக எப்படி நிகழ்வுற்றது என்பதை நாம் பார்க்கிறோம், வரலாறுகளிலே. இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக எடுத்துச் சொல்லி, இத்தமிழினத்தை விழிப்படையச் செய்து விடவேண்டும் என்கிற முயற்சி ஒரு சிறு