பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

11

எல்லைக்குள் நடந்து முடிந்துவிடும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை

பலவேறு தமிழின முன்னேற்ற முயற்சிகள்:

தந்தை பெரியார் அவர்கள் அவர் காலக்கட்டத்தில் செய்த முயற்சிக்கும், அவரைத் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் செய்த முயற்சிகளுக்கும், இப்போது நாங்கள் செய்கிற முயற்சிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். என் அன்புக்கும் பெருமைக்குமுரிய அறிஞர் பெருமகனார் வழக்குரைஞர் இராமதாசு அவர்கள் சில கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். அவர் சிறந்த பேரறிஞர் ஆவார். நான் விளையாட்டிற்காக அவரை வைத்துக் கொண்டு சொல்லவில்லை. முதுகலைப்பட்டப்படிப்பே மூன்று நான்கு படித்த ஆன்றவிந்து அடங்கிய கொள்கை சான்ற பேரறிஞராவார். அதே போல என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அன்பர் அரு.கோபாலன் அவர்கள் இன்றைக்கு நேற்றன்று: கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக இதே தமிழ் உணர்வோடும் எவ்வாறாகிலும் இத்தமிழினம் முன்னேறவேண்டும் என்ற வேட்கையோடும் - வேட்கை என்பது மட்டுமன்று அதையே வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். எனவே அவரால் முன்னேற முடியவில்லை, முன்னேற முடியவில்லை என்பதை அவர் வாழ்க்கை நிலைகளிலிருந்துதான் சொல்ல முடியுமே தவிர, அறிவிலே-முயற்சியிலே - சிந்தனையிலே ஏராளமான முன்னேற்றமடைந்திருக்கிறார்:

நம்முடைய முயற்சிகள் வெற்றியடையாமைக்கு
நம்மவர்களே காரணம்!

இவர்களெல்லாரும் எங்களோடு சேர்ந்து, நாங்கள் அவர்களோடு இணைந்து நின்று, அதே பெரியாருடைய