பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஓ! ஓ! தமிழர்களே!

தொடக்கக் காலத்துக் கருத்துகளை வேராகக் கொண்டு அவர் கூறிய திராவிட மரபு, திராவிட நிலைகள் என்று சொன்னதற்குமேல், அதற்குமுன் தமிழியமாகத் தமிழின நிலைகளையெல்லாம் வரலாற்றையெல்லாம் சிந்தித்து, இனி நாம் எப்படி இருக்க வேண்டும், எந்த முயற்சிகளைச் செய்தால் அந்த நிலைக்கு இந்த இனத்தைக் கொண்டு வர முடியும் என்கிற தன்மையில், இயங்கிக் கொண்டிருக்கிற அந்த நிலைகள் வேறு. தந்தை பெரியார் அவர்கள் அந்தக் காலத்திலே திராவிட இயக்க உணர்வோடு செய்து கொண்டிருந்த அந்த முயற்சிகள் வேறு; ஆனால் தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியையே ஒன்றுமில்லாமல் முறியடித்து விட்டார்களே. யார் முறியடித்தது? நம் எதிரிகளல்லர்; நம்மவர்களே! நீங்கள் இதை மறந்து விடக் கூடாது

நான் இதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு பாடலில் சொல்லியிருக்கிறேன். தமிழ் இனத்திற்கு இன்றைக்கு வரைக்கும் வந்திருக்கின்ற தீங்குகள், துன்பங்கள், இடர்ப்பாடுகள், வரலாற்றின் அடிப்படையிலே புள்ளிபோட்டு, எடுத்துச் சீர் தூக்கிப் பார்த்தோமானால், நமது வீழ்ச்சிக்கும் நம் உரிமைக்கும் நம் உரிமை இழப்புகளுக்கும் அறியாமை நிலைகளுக்கும் அடிப்படையான காரணங்கள் எதிரியினுடைய தாக்குதல்களால் ஏற்பட்டவையாகத் தெரியவில்லை. நம் இனத்தினுடைய காட்டிக் கொடுப்பினாலே ஏற்பட்ட தன்மை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

பலவேறு காரணங்களுக்காகக் காட்டிக்
கொடுத்தார்கள்

இராமாயண காலத்திலிருந்து இந்த இனத்தை அரசியலுக்காகவும் பொருளியலுக்காகவும்,மதத்துக்