பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

13

காகவும், சாதிக்காகவும், பண்பாட்டுக்காகவும், மொழிக்காகவும் காட்டிக் கொடுத்தவர்கள் பலபேர். பலகாலங்களிலே பல அறிஞர்கள், தலைவர்கள் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் எல்லாருமாக இருந்து, தம் இனத்தவர்களைப் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சிறந்தத் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து அழிவைச் செய்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நிலைவரை அழிப்பு வேலைகள் நடந்துகொண்டுதாம் இருக்கின்றன. எதிரியாக மற்றபடி நம்மைப் பகைவர்களாகக் கருதுகின்றவர்கள் எங்கேயோ இருந்து கொண்டிருக்கின்றவர்கள் நம்முடன் நேரிடையாக வந்து மோதவில்லை. ஆட்சியிலே இருக்கும் ஆட்சியாளர்களின் துணையோடு-பெரிய முதலாளிகளின் உற்ற துணையோடு சேர்ந்து, நமக்கு எவ்வளவு அழிவு வேலைகளைச் செய்ய வேண்டுமோ, அத்தனை அழிவுகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மீட்சியுறுவதும் கடினம்!

எனவே, ஏதாவது ஒரு சிறு நிலையிலே சிறிது முயற்சி செய்து, அல்லது சிறிய துறையின் மூலம் முயற்சி செய்து வென்றெடுக்க முடியாது; அரசியலிலே மட்டும் மிகவும் விழிப்பாக இருந்து ஆளுமை பெற்று ஆட்சியைக்கைப்பற்றித் தமிழினத்தை மீட்டுவிட முடியாது. அல்லது பொருளியலில் மட்டும் எந்த அளவு கவனம் செலுத்தமுடியுமோ. எந்த அளவு கவனம் செலுத்தி முதலாளியத்தைப் போராடி ஒழித்துப் பொருளியல் விடிவை-முன்னேற்றத்தைப் பெற்றுத்தர முடியுமோ. அந்த அளவு பெற்றுத் தந்தால் கூட இந்த இனம் முன்னேறிவிட முடியாது

நன்றாக நீங்கள் சிந்திக்கவேண்டும். அதேபோல கலைக்காகவோ பண்பாட்டுக்காகவோ, அவற்றிலே